Posts

Showing posts from August, 2014

சூழ்நிலை

ஒரு முதியவர் ஒரு.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..! வெயிலில் வந்த களைப்பு.. அவர் முகத்தில் தெரிந்தது..! அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை.. அழைத்து கேட்டார்..! " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை..! என்று..! அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்..! பெரியவர் தனது சட்டை பைக்குள்.. கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."? சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க.. இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்றான்..! பெரியவர் சொன்னார்.. "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்.. வெளியே வெயில் வேறு..அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்..! என்றார்..! சர்வர்.. சரி..சரி எவ்ளோ பணம் குறைவா வச்சுயிருக்க..! என்று கேட்டான்..! பெரியவர் என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது..! என்றார்..! சர்வர் சரி..தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..? என்றான்..! பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..! சாப்பாடு கொடுத்தான்..! பெரியவர் சாப்பிட்டு

நம்பிக்கை

பார்வதி,பரமசிவனிடம் கேட்டார்,''கங்கையில் குளித்தால் பாவம் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே!அப்படியானால் கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் பாவம் நீங்கியவர்கள் தானே? அவர்கள் அனைவரும் இறந்தபின் கைலாயம் வர வேண்டும் அல்லவா?ஆனால் அவ்வளவு பேரும் வருவதில்லையே.ஏன்?''சிவன் சிரித்துக்கொண்டே,''இதற்கு பதில் வேண்டுமானால் என்னுடன் கங்கைக் கரைக்கு வா,''என்று சொல்லி அழைத்துச் சென்றார்.கங்கையில் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது முதிர்ந்த பெண்,''ஐயோ,என் கணவர் ஆத்தோடு போகிறாரே,யாராவது காப்பாற்றுங்களேன்,''என்று அலறினார்.உடனே அங்கிருந்த பலரும் கிழவரைக் காப்பாற்ற ஓடினார்கள்.அப்போது கிழவி,''சற்று நில்லுங்கள்.உங்களில் பாவம் செய்யாத யாரேனும் அவரைக் காப்பாற்றுங்கள்.பாவம் செய்த ஒருவர் அவரைத் தொட்டால் அவரும் இறந்து விடுவார்,என் கணவரும் இறந்து விடுவார்,''என்றாள்.உடனே வேகமாக ஓடிய அனைவரும் அப்படியே நின்று விட்டனர்.பாவம் செய்யாதார் யார் இருக்கிறார்கள்?திடீரென சாதாரண, படிப்பில்லாத ஒரு கிராமத்து வாலிபன் ஆற்றில் குதித்து நீந்தி சென்று கிழ

செந்தூரம்

இலங்கையில் ராவணனை ராமன் வெற்றி கொண்டு விட்டான்.இத்தகவலை உடனே சீதைக்கு சொல்ல அனுமன் விரைந்தான்.சீதை தலையில் நேர் வகிடு எடுத்து, சுமங்கலி என்பதால்,நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்திருந்தாள். இந்தப் பழக்கம் அனுமனுக்குத் தெரியாது.சீதைக்கு நெற்றியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வருகிறதோ என்று எண்ணி பயந்து விட்டான்.சீதையிடம் பதட்டத்துடன் விபரம் கேட்க சீதை சொன்னாள்,''இது செந்தூரம்.இதை நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டால் தலைவனுக்கு (கணவனுக்கு) வெற்றி கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை,''என்று கூறி சிறிது செந்தூரத்தை எடுத்து அனுமனின் கையில் கொடுத்தாள்.''தலையில் சிறிது செந்தூரம் வைத்தாலே தலைவனுக்கு வெற்றி கிட்டும் என்றால் நான் என் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டால் என் தலைவனுக்கு எப்போதும் வெற்றி கிட்டும் அல்லவா?''என்று கூறிக் கொண்டே அனுமன் தனது உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டானாம்.அதனால்தான் ஆஞ்சநேயருக்கு சிலை முழுவதும் செந்தூரம் பூசும் வழக்கம் வந்தது.

வெற்றியோ தோல்வியோ

ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்., ஒருவனுக்கு கடைசி இடந்தான் கிடைத்தது .. நண்பர்கள் கிண்டல் செய்தார்கள் அவன் கவலை கொள்ளவில்லை .. அமைதியாக அவர்களை பார்த்து சொன்னான் ..  வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால் தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே...  வெற்றியோ தோல்வியோ என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா..  அந்த வெற்றியே எனக்கு போதுமென்றான் ..!!

சங்கரநாராயணன்!

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து, கோவிலுக்கு சென்று, கோமதியம்மன், சங்கரலிங்க சுவாமியுடன் பள்ளியறை ஊஞ்சலில் ஒன்று சேர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு உருகி, கண்ணீர் மல்க வழிபட்டு வருவார் திருநாவுக்கரசு. 'பள்ளியறை தீப ஆராதனைய பாத்துட்டா போதும்... பிறவிப் பயனயே அடைஞ்சுரலாம். இத விட, வாழ்க்கையில நமக்கு வேற என்ன வேணும்...' என்று, கோவிலிலிருந்து வெளி வரும்போது, தன் நண்பர்களிடம் அவர் சிலாகிப்பது உண்டு. ஆனால், வீடு வந்து சேர்ந்ததும், தன் தங்கை கோமதியை முதலில் பார்ப்பதை, மிகக் கவனமாய் தவிர்த்து வந்தார் திருநாவுக்கரசு. தப்பித் தவறி பார்க்க நேரிட்டு விட்டால், அன்று முழுவதும், அவர் முகம்,'கடுகடு'வென, இருக்கும். அவருடைய இந்த, 'கடுகடு'ப்பிற்கு காரணம், கோமதி ஒரு கைம்பெண். அண்ணனின் கண்களுக்கு கூட, அவள் ஒரு அபசகுணமாகவே தெரிந்தாள். தங்கை கோமதிக்கு, நல்ல சீர் வரிசையோடு தான், கல்யாணம் செய்து வைத்தார் திருநாவுக்கரசு. மாப்பிள்ளை ஏற்கனவே, குடியை முதல் தாரமாய் மணந்ததினால், குடித்துக் கும்மாளமிட்டு, கொண்டவளின் கழுத்தில் தாலிக் கயிறை மட்டுமே விட்டு வைத்து, மின்னியதை எல்லாம் கழட்டி வி

தயங்காதே... தளராதே...!

நன்றாக படிக்கக் கூடிய எட்டாம் வகுப்பு மாணவன் அவன்; ஆனால், குடும்பத்திலோ வறுமை. தினம், 10 கி.மீ., நடந்து போய் தான், படிக்க வேண்டும். சில சமயம் சைக்கிளிலும், எப்போதாவது பஸ்சிலும் செல்வான். அப்போது, பஸ் கட்டணம் கால் ரூபாய் தான் என்றாலும், அதையும் கணக்கு பார்க்க வேண்டிய குடும்ப சூழல். பிராமணர் என்பதால், ஊக்கத்தொகைக்கும், உதவி தொகைக்கும் வழியில்லை; விடுதியில் தங்குவதற்கோ விதி இடம் தரவில்லை. இதனால், பள்ளித் தலைமையாசிரியரிடம் சென்ற அவன், 'சார்... தினமும் 10 கி.மீ., நடந்து, பள்ளிக்கு வந்து போவது சிரமமாயிருக்கிறது; பஸ்சை எதிர்பார்த்தா, அம்மா பட்டினி கிடக்க வேண்டி வரும். இலவசமாய் விடுதியில் இடம் கிடைக்குமானால், எங்கள் குடும்பமே உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பர்...' என்று, கெஞ்சினான். அவனது நிலையை அறிந்த ஆசிரியர், 'உனக்கு உதவணும்ன்னு எனக்கும் விருப்பம்தாம்பா...ஆனா, நான் சிபாரிசு செய்யணும்ன்னா, நீ வகுப்புல முதல் மாணவனாக வரணும்; நல்லா படிச்சு, மார்க் எடு பாக்கலாம்...' என்றார். அவனும் சந்தோஷத்துடன், 'எல்லா பாடத்திலயும் நிச்சயமாய் முதலாவதாக வருவேன்...' என்று கூறிச் சென்றா

துஷ்டனைக் கண்டால்...

"இப்ப எனக்கு, 10 ஆயிரம் ரூபா தருவியா, மாட்டியா?'' உறுமலாக வந்தது ரமேஷின் குரல். ''எதுக்குன்னு சொல்லிட்டு வாங்கிக்கங்க.'' உமாவின் குரலும் உயர்ந்தது. ''என்னடி... சம்பாதிக்கிற திமிரா... நான் நினைச்சா ஒரு நாளைக்கே, 10 ஆயிரம் ரூபா சம்பாதிப்பேன் தெரியுமா?" ஏதோ சொல்ல வாயெடுத்த உமாவின் கண்களில், ராஷ்மி தென்பட்டாள். கலக்கத்துடன் தன் பெற்றோரை பார்த்துக் கொண்டிருந்த, அந்த பதினோரு வயது சிறுமியை கண்டவுடன், 'டக்'கென்று, வாயை மூடி, உள் அறைக்குச் சென்று, பீரோவிலிருந்து, 10 ஆயிரத்தை எடுத்து வந்து கொடுத்தாள். ''அவ்வளவு பயமிருக்கட்டும்,'' என்று கூறியபடியே, உமாவின் கையிலிருந்த பத்தாயிரம் ரூபாயை பிடுங்கி, பாக்கெட்டில் திணித்தபடி, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை உதைத்து பறந்தான் ரமேஷ். ''ராஷ்மி கண்ணா... லஞ்சுக்கு, உனக்கு பிடிச்ச புதினா சாதமும், உருளைக் கிழங்கு வறுவலும் பாக்ஸ்ல வச்சுருக்கேன்; எடுத்துகிட்டு கிளம்புடா,'' என முடிப்பதற்குள், பள்ளி வாகனத்தின், 'ஹாரன்' சத்தம் கேட்டது. கிளம்பிய ராஷ்மியுடன் வாசல் வரை கூடவே